fbpx

ஏக் மினிட் எனக்கூறியும் நிறுத்தவில்லை ! ஓடும் ரயிலில் விடாப்பிடி குடுமிப்பிடி சண்டை… காரணம் என்ன தெரியுமா?

ஓடும் ரயில் பெண்கள் விடாப்பிடியாக சண்டையிட்டதோடு அவர்களை விலக்க வந்த பெண் போலீசையும் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புறநநகர் ரயில் எப்போதும் கூட்ட நெரிசலோடு காணப்படும். ஆண்கள், பெண்கள் , மாணவர்கள் என பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். உள்ளூர் ரயில்களில் இதனால் எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும்.

நேற்று முன்தினம் மும்பை புறநகர் ரயிலில் பெண்கள் விட்டுக்கொடுக்காமல் திடீரென குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சண்டை எதற்காக நடந்தது என்பதுதான் வருத்தமே!

டர்பே ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதில் 3 பெண்களுக்கு இடையே இருக்கை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் பிரச்சனை பெரிதாகி அடிதடியானது. ஒருவருக்கொருவர் விடாமல் தலை முடியைப் பிடித்துக் கொண்டு மாறி மாறி அடித்துக் கொண்டனர். ஏக்.மினிட் ஏக்மினிட் எனக் கூறியும் இடைவெளி விடாமல் பெண்கள் அடித்துக் கொள்கின்றனர். அதில் பலர் தடுக்க முயன்றும் பலனளிக்கவில்லை.

இதில் சண்டை பெரிதானதால் ஓரு சிலர் அந்த இடத்தில் நிற்காமல் நகர்ந்து சென்றுவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த பெண் காவலர் தடுப்பதற்காக வந்தபோது அவருக்கு சரியான அடி … போலீஸ் என்றும் பாராமல் ரத்தக்காயத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த சம்பவத்தில் 3 பெண்களுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

மும்பை மாநகரில் நடந்த சம்பவம் இந்தியா முழுக்க வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் ஒருவர் கூறுகையில் டர்பே ரயில் நிலையத்தில் காலியாக இருந்த இருக்கையில் ஒருபெண் பயணி வேறு பெண்ணை அமர வைக்க முயன்றார்.

அப்போது இருக்கைக் கு அருகில் நீண்ட நேரமாக காத்திருந்த ஒரு பெண்ணும் அந்த இருக்கையில் அமர முயற்சித்துள்ளார். இதனால் இரண்டு பெண்களும் அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதால்தான் இந்த பிரச்சனையே வந்தது என போலீசார் தெரிவித்தனர்.

Next Post

உங்கள் செல்போனிலும் 5 ஜி ஆக்டிவேட் செய்யலாம்… எப்படி தெரியுமா ?

Sat Oct 8 , 2022
இந்தியாவில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் உங்கள் மொபைலிலும் 5 ஜி சேவையை பெற முடியும் எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் 5 ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி சேவைகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் நான்கு நகரங்களில் 5 ஜி டெஸ்டிங்கை தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் […]

You May Like