இந்தியாவில் ஐ.டி.யில் பணி புரியும் ஊழியர்கள் தற்போது மூன்லைடிங் மேற்கொள்வது அவர்களின் வேலைக்கு ஆப்பாக அமைந்துவிடும் என்ற எச்சரிக்கை பதிவுதான் இது..
ஐ.டி.நிறுவனங்கள் ஊழியர்கள் மூன் லைடிங் எனப்படும் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பது நிறுவனத்தின் விதிமுறைகள் படி அது குற்றமாகும். கொரோனாவால் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதை தொடர்ந்து அனுமதித்து வருகின்றனர்.
சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வேலை பார்க்கச் சொல்கின்றனர். இந்நிலையில் ஐ.டி.ஊழியர்கள் தங்களுக்கு மற்றொரு வருமானம் கிடைக்கும் என்ற வகையில் ஒரே நேரத்தில் இரு வேறு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதை ஐ.டி.நிறுவனங்கள் மூன் லைடிங் என்ற பெயரில் குறிப்பிடுகின்றது. இதற்கு பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ். உள்ளிட்ட முன்னணி ஐ.டி.நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் மூன்லைடிங் மேற்கொண்டடால் அவர்களை பணி நீக்கம் செய்கின்றனர். இதில் மூன் லைடிங் ஈடுபட்டதற்காக விப்ரோ நிறுவனமானது 300 ஊழியர்களை இதுவரை பணி நீக்கம் செய்துள்ளது.
ஆனால் டெக் மகேந்திரா நிறுவனம் இந்த முறையை ஆதரவளிக்கின்றது. அதாவது தங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தால் ஆதரவளிப்போம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. ஃபினான்சியல் டைம் அறிக்கையின்படி, இந்தியாவில் ஐ.டி. ஊழியர்களில் சுமார் 8 முதல் 9 சதவீதம் பேர் மூன்லைடிங்கில் ஈடுபட்டனர். என தெரிவித்துள்ளது. இதே போல கொடாக் நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி 65 சதவீத உழியர்கள் முழு நேரம் வேலை வாய்ப்பு ஊழியர்கள் மூன்லைடிங் மேற்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளது.