fbpx

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார வழக்கு..!! சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு..!! என்ன தண்டனை..?

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தின் போது ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்த சந்தீப் கோஷ் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது அதை தற்கொலை என பெற்றோர்களிடம் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே அவரசர அவசரமாக கட்டட புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் சஞ்சய் ராய் குற்றவாளி என சீல்டா கோர்ட் அறிவித்துள்ளது. தண்டனை விவரம் ஜனவரி 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More : பரந்தூர் செல்லும் விஜய்க்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை..!! மீறினால் கைது செய்ய திட்டமா..?

English Summary

A Sealdah court has found Sanjay Rai guilty in the rape and murder of a medical student in Kolkata.

Chella

Next Post

பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஜோராக நடந்த விபச்சார தொழில்..!! திடீரென உள்ளே நுழைந்த போலீஸ்..!! எத்தனை பெண்கள்..?

Sat Jan 18 , 2025
The police rescued the five women who were involved in sex work and sent them to a women's shelter in Chennai.

You May Like