fbpx

’அத வெளிய லீக் பண்ணட்டுமா’..? ’ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ’..!! வீடு புகுந்து மிரட்டிய இளம்பெண்..!!

தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகக் கூறி பெண் தோழி ஒருவர் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்த இளம்பெண் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயது இளம்பெண்கள் சமூக வலைதளம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளனர். இருவரும் இடையே நட்பு உருவாகி அதீத நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் திடீரென்று ராஜஸ்தானின் நகவுர் பகுதியில் வசிக்கும் தனது தோழி வீட்டிற்குள் நுழைந்து கலாட்டா செய்யத் தொடங்கியுள்ளார்.

’அத வெளிய லீக் பண்ணட்டுமா’..? ’ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ’..!! வீடு புகுந்து மிரட்டிய இளம்பெண்..!!

தனக்கும் அந்த வீட்டு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என மிரட்டி கலாட்டா செய்த அந்த பெண், இல்லையென்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளார். தனது கோரிக்கையை ஏற்காவிட்டால், இருவரும் பேசிய சாட்டிங் பதிவுகளை லீக் செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். அந்த பெண் செய்த கலாட்டாவால் மிரண்டு போன ராஜஸ்தான் பெண்ணின் குடும்பத்தார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை காவல்துறை கைது செய்தது.

Chella

Next Post

பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியானது!!

Mon Nov 7 , 2022
தமிழ்நாட்டில் பத்து  முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.  கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like