தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதனை விளக்கி இந்தியா டுடே சேனலில் நெறியாளர் தமிழில் விளக்கமளித்தது இந்தி திணிப்பாளர்களுக்கு ஒரு சவுக்கடியாக உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடே செய்திகளில் இந்தி திணிப்பு பற்றி தமிழகத்தின் நிலைப்பாடு பற்றிய செய்தியை நெறியாளர் அக்ஷிதா நந்தகோபால் வாசித்தார். தமிழில் ’’ வணக்கம் நான் அக்ஷிதா நந்தகோபால் இன்றைக்கு நாம் விவாதிக்க இருப்பது இந்தி மொழி திணிப்பு பற்றியது. என தமிழில் பேசிவிட்டு ’’ தொடர்ந்து ஆங்கிலத்தில் விளக்கமளித்தார். ’ நீங்கள் தமிழராக இருந்தால் தமிழ் மொழி புரிந்தால் உங்களால் முழுமையாக நான் கூறுவதை புரிந்து கொள்ள முடியும். இல்லை எனில் உங்களுக்கு புரியாது. இதே போல மற்ற மொழியை திணித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் ’’ என மொத்த தமிழர்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பையும் 3 வரிகளில் முடித்துவிட்டார்.இது தற்போது வைரலாகி வருகின்றது.
இந்தியை திணிப்பதால் அனைத்தும் இந்தி மயமாகும். தமிழ்நாட்டில் இந்தியை கற்றுக்கொள் என்பது திணிக்கும் செயல்தான். எனவே பல்வேறு அரசியல் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.