fbpx

அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்..!! இந்த பிரச்சனையை கையாள்வது சிரமம்தான்..!! ஷாக் கொடுக்கும் பிரதமர்..!!

பருவநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிவிங்கிகளை கண்காணிக்கவும், பார்வையாளர்கள் பார்வையிடவும் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம். நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப பெயர் வைத்தால் சிறப்பானதாக இருக்கும். விலங்குகளை மனிதர்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் கருத்துகளை தெரிவிக்கலாம்.

அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்..!! இந்த பிரச்சனையை கையாள்வது சிரமம்தான்..!! ஷாக் கொடுக்கும் பிரதமர்..!!

காசநோய் இல்லாத தேசம் உடல் மற்றும் மன நலனுக்கு யோகா உகந்ததாக உள்ளதை உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. காசநோய் இல்லாத தேசமாக 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியா மாறும். உள்ளூர் தொழிலுக்கு மக்கள் ஆதரவு அளித்து உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டில் இந்தியா பல உயரங்களை எட்டியுள்ளது. அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், உடல்தகுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பலரும் உழைக்கின்றனர். சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய இந்தியாவின் பயணத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்..!! இந்த பிரச்சனையை கையாள்வது சிரமம்தான்..!! ஷாக் கொடுக்கும் பிரதமர்..!!

சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்தலாம். பருவ நிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நமது கடலோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் கவலையளிக்கின்றன. இதுபோன்ற பிரச்சனைகளை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

கஞ்சா பயிரிட்டவர்களை பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது... கொலை வெறி தாக்குதல்..!!

Sun Sep 25 , 2022
கலபுரகி மாவட்டம் கமலாப்புரா காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த நவீன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பீதர் மாவட்ட எல்லையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உம்காரில் இருக்கும் ஒரு கிராமத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்படுவதாகவும், அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் கூறினார். எனவே கஞ்சா பயிரிடும் கும்பலை பிடிக்க கலபுரகி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் தலைமையிலான காவல்துறையினர் […]

You May Like