fbpx

இளம் கிரிக்கெட் வீரருக்கு தனது பைக்கில் லிப்ட் கொடுத்த எம்.எஸ்.தோனி..!! வைரலாகும் வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. சமீபத்தில் அமெரிக்கா சென்ற தோனி கால்பந்து விளையாட்டு மைதானத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார்.

அந்த வகையில், தற்போது இளம் கிரிக்கெட் வீரருக்கு தோனி தனது பைக்கில் லிப்ட் கொடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி பயிற்சி முடிந்த பின் தன்னுடன் பயிற்சியில் ஈடுபட்ட இளம் கிரிக்கெட் வீரருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார்.

ஹெல்மெட் அணிந்தவாறு தோனி தனது ஆர்எக்ஸ் 350 பைக்கில் அந்த இளம் வீரரை ஏற்றிக்கொண்டு பயணம் செய்துள்ளார். அந்த பைக் பயணத்தை இளம் வீரர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண: https://x.com/JharkhandJatraa/status/1702547147303076120?s=20

Chella

Next Post

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏலியன்களின் சடலம்..!! நாசா எடுத்த அதிரடி முடிவு..!!

Fri Sep 15 , 2023
மெக்சிகோ தேசத்தில் ’ஏலியன்களின் சடலங்கள்’ என்று முன்வைக்கப்பட்டவை குறித்து ஆராய்வதில் அமெரிக்காவின் நாசா முக்கிய முடிவு எடுத்துள்ளது. மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஏலியன் ஆய்வாளருமான ஜெய்ம் மௌசன் என்பவர், செவ்வாயன்று மெக்ஸிகோ காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் பதப்படுத்தப்பட்ட இரு ஏலியன் சடலங்களை காண்பித்தார். அளவில் சிறியதாகவும், கைகளில் 3 விரல்களுடனும், தலையின் பின்பகுதி பெரியதாகவும் தென்பட்ட அந்த உடல்கள், சர்வதேச கவனத்தை ஈர்த்தன. பரிசோதனையில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை […]

You May Like