ரத்த வங்கியில் பிளேட்லெட்டுக்கு பதிலாக மொசாம்பி ஜூஸ் கொடுத்ததால் டெங்கு நோயாளி பலியானதாக கூறப்பட்ட நிலையில் அது மொசாம்பி ஜூஸ் கிடையாது என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளியான பிரக்யராஜ் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு ரத்த பிளேட்லெட் வழங்க வேண்டும் என வாங்கி வருமாறு அறிவுறுத்தியது. இதன் பேரில் ஒரு ரத்த வங்கிக்கு சென்ற நோயாளியின் உறவினர்கள் பிளேட்லெட்டை வாங்கி வந்தனர். பாதி ஏற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி நோயாளி உயிரிழந்தார்.
இதையடுத்து அது பிளேட்லெட் கிடையாது மொசாம்பி ஜூஸ் என பிரளயம் வெடித்தது. இதையடுத்து ஒரு ரிப்போர்ட்டர் இது மொசாம்பி ஜூஸ் என கூறி ரத்த வங்கியின் நிர்வாகம் குறித்து ரிப்போர்ட்டர் விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தியது. இந்நிலையில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் கொடுக்கப்பட்டது மொசாம்பி ஜூஸ் கிடையாது. ரத்த பிளேட்லெட்தான் என கூறியுள்ளது. அதே நேரத்தில் மிகவும் மோசமாக பதப்படுத்தப்பட்ட பிளேட்லெட் எனவும் 3 பேர் குழுவினர் அறிக்கை சமர்ப்பத்தினர். இந்த தகவலை வைத்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பிளேட்லெட் என கூறி ரத்த வங்கி கொடுத்த திரவத்தால்தான் பிரக்யராஜ் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இதையடுத்து மருத்துவமனையை மூடி மருத்துவத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.