பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தை மற்றும் உடந்தையாக இருந்த தாய், தாயின் நண்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் ஒடிசாவை பூர்வீகமாக கொண்ட அந்த குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மைனர் பெண்ணை அவரின் தந்தை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதற்கு அந்த சிறுமியின் தாயாரும், தாயாரின் நண்பரும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறுமியின் தாயாரின் நண்பரும் அந்த சிறுமியிடம் ஆபாசமாக பேசி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இப்படியாக, 4 ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வந்திருக்கிறார் அந்த சிறுமி.

தற்போது அந்த சிறுமிக்கு 20 வயதாகிறது. குடும்பத்தினரின் தொல்லை இப்படி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால், பொறுமையை இழந்த அந்த இளம்பெண் காவல்துறையை நாடியிருக்கிறார். தாய், தந்தை, தாயின் நண்பர் என மூவரும் மீதும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். சிறுமியின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.