முன்னாள் எம்.பி. சசிகலா டெல்லியில் தங்கி இருந்த வீட்டில் பொருட்களை வெளியே வீசிய அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 2014ல் பதவ வகித்த சசிகலா புஷ்பா ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததால் இவருக்கு எம்.பி. வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் பதவிக்காமல் முடிந்த பின்னர் அவர் 2020ல் பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது பா.ஜ.கவின் துணைத் தலைவராக உள்ளார் சசிகலா புஷ்பா. இவர் எம்.பியாக இருந்தபோது டெல்லியில் அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டது. பதவிக்காலம் முடிந்து 2 ஆண்டுகளில் ஆகியும் அவர் வீட்டை காலி செய்யவில்லை மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியும் அவர் இதற்கு பதில் அளிக்கவில்லை. எனவே அதிகாரிகள், அவரது அரசு குடியிருப்பில் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே வீசிவிட்டு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.