ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034ஆம் ஆண்டில் உயிரிழந்துவிடுவேன் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால், இந்தாண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

மேலும், தான் எவ்வளவு காலம் வாழ வேண்டும், எவ்வளவு காலம் வாழ்ந்தேன், இன்னும் எவ்வளவு காலம் வாழ்வேன் என்பதை எண்ணியே நினைவு நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 75 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இப்போது எனக்கு 63 வயதாகும் நிலையில் 75-வது பிறந்தநாள் வரை நினைவு தினத்தை கொண்டாடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.