fbpx

மனைவிகளுக்கு மட்டும் தான்… கணவருக்கு கிடையாது… டெல்லி உயர்நீதிமன்றம்!

கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களை குடும்ப வன்முறை சட்டம் பாதுகாக்காது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கணவர் அளித்த புகாரை ரத்து செய்யக் கோரி, பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதி, திருமணமான பெண்களைக் கொடுமையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் முதன்மையான பாதுகாப்பு, ஒரு குடும்பத்தின் ஆண் உறுப்பினருக்கு, குறிப்பாக கணவனுக்குக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் பிரிவு 2(a) இன் வரையறையை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கு மட்டுமே இந்த சட்டம் நடைமுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி வழக்கின் விசாரணை வரும் தேதி 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Kokila

Next Post

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த வாணி ஜெயராம்..? போலீசார் அதிர்ச்சி தகவல்..

Sat Feb 4 , 2023
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நெற்றியில் காயத்துடன் சடலமாக கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.. அவரின் வீட்டுக்கு மலர்கொடி என்ற பணிப்பெண் 11 மணிக்கு வேலைக்காக வருவது வழக்கம்.. இந்நிலையில் இன்று பணிப்பெண் வந்த போது கதவு திறக்கப்படாததால் வாணி ஜெயராமின் தங்கைக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.. […]

You May Like