fbpx

60 அடி உயரத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்த மக்கள்!!! ரயில் வராததால் பெரும் சேதம் தவிர்ப்பு… மகாராஷ்டிர ரயில்வே நடை மேம்பாலம் விபத்து!!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார் ஷா ரயில்வே நிலையத்தின் நடைபாதைப் பாலம் 60 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. நடைமேடை எண் 1 மற்றும் 4-ஐ இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் பல ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது.இந்நிலையில், நேற்று(நவ.27) மாலை 5 மணி அளவில் அந்தப் பாலத்தின் தகடுகள் திடீரென உடைந்து விழுந்தன. இதனால் அந்த பாலம் வழியே நடந்துசென்றவர்கள் நிலைதடுமாறு கீழே தண்டவாளங்கள் மீது விழுந்தனர்.

இந்த ரயில்வே நடை மேம்பாலம் விபத்தில் 20 பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகின, மேலும் இவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனினும் 60 அடி உயரத்திலிருந்து விழுந்தவர்களின் நிலை என்ன எனும் அச்சம் எழுந்திருக்கிறது.

Kathir

Next Post

நெருங்கும் தேர்வு முடிவுகள்..!! குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? உங்கள் சந்தேகத்திற்கு பதில் இங்கே..!!

Mon Nov 28 , 2022
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. குரூப்-4 கட் ஆஃப் எவ்வளவு நிர்ணயமாக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியிட்டது. 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 22 லட்சத்திற்கும் […]

You May Like