ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்கள் பதினோறாயிரம் பேருக்கு பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல பகுதிகளில் லட்சக்கணக்கானோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்ததாரர்களாக பணியில் உள்ளனர். கடந்த சில வருடங்களாகவே பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் 11,136 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி நிரந்தர ஊழியர்களுக்கான சம்பளம் இந்த 11,136 பேரும் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட சுகாதார உழியர்கள் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதே போல புதுச்சேரியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு மாநிலங்களிலும் பணிநிரந்தரம் செய்யப்படாத ஊழியர்கள் உள்ளனர். இந்த அறிவிப்புக்கு பின்னராவது பிற மாநிலங்களில் அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.