குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரிபுரா , அசாம் போன்ற இடங்களுக்குகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றிருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பின்னர் கடந்த 14ம் தேதி டெல்லிக்கு திரும்பினார்.
ஏற்கனவே கண்தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வலியுறுத்தினார்கள். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இன்று அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் செய்தித் தொடர்பாளர். அறிக்கை வெளியிட்டார்.. குடியரசுத் தலைவர் முர்முவுக்கு ஆறுவை சிகிச்சை வெற்றகரமாக வீடு திரும்பினார். என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு அவர் வீட்டில் ஓய்வெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.