கணவன் கண்முன்னே காதலனுடன் குத்தாட்டம் போட்ட மனைவி, திடீரென கட்டியணைத்து முத்தம் கொடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கியமான தருணம் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். திருமண வாழ்க்கை சிலருக்கு இனிப்பாக அமைவதும், சிலரும் கசப்பாக அமைவதும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துணையை பொறுத்தது தான். பலருக்கும் தங்களது திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பது பற்றிய சில கனவுகள் இருக்கும். பல கனவுகளும், ஆசைகளும் சுமந்து அடியெடுத்து வைக்கும் இந்த திருமண நாளில் நடைபெறும் சம்பவங்களில் சில வினோதமானதாக இருந்தால், பல சுவாரஸ்யமானதாக இருந்து, அனைவரின் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகிறது. பொதுவாகவே, திருமணத்தில் நடக்கும் விஷயங்கள் பசுமரத்தாணி போல மனதில் தங்கிவிடும். அது நல்லதா இல்லை துன்பத்தைத் தரக்கூடியதா என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்.

அப்படி ஒரு திருமண நிகழ்ச்சியில், மணப்பெண் செய்த செயல், அடிவயிற்றில் தீயை பற்ற வைத்தது போல நடந்து, இணையத்தில் அந்த வீடியோ வைரலாகிறது. அந்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டு பலரின் முகத்தையும் சுளிக்க வைக்கிறது. திருமணத்தில், மணமகனை விட்டு விட்டு, மணமகள் வேறு ஒருவருடன் ஜாலியாக டான்ஸ் ஆடி, அவரை கட்டிப்பிடித்துக் கொண்டால், மணமகன் அந்த இடத்தில் எப்படி நடந்துக் கொள்வார்? வைரலாகும் இந்த வீடியோவில், பிரியாவிடை கொடுக்கும் பெண் அழைப்பு நிகழ்ச்சியில், மணமகளின் காதலன் அந்த இடத்துக்கு வருகிறார். அப்போது நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று சொல்லக்கூடிய டான்சும், கட்டுப்பிடி சம்பவமும் நடைபெறுகிறது.
மாப்பிள்ளையை அதிரவைக்கும் அளவுக்கு காதலனுடன் சேர்ந்து நடனமாடும் மணமகள் காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு விலகவே இல்லை. சில விநாடிகள் பொறுத்துப் பார்த்த ஒரு பெண்மணி, கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களை பிரித்து விட முயற்சி செய்கிறார். இதைப் பார்த்த மாப்பிள்ளைக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆனால், இந்த வீடியோவைப் பார்க்கும் பல கேள்விகள் எழுகின்றன. வெறும் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வைரலாகும் இந்த வீடியோ பலரின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.