fbpx

பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே..! இனி இந்த வசதியும் உண்டு..!

மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளிலும் படுக்கை விரிப்புகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகள், வசதிகள் உள்ளிட்டவை அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளுக்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளிலும் படுக்கை விரிப்புகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இதுவரை இந்த வகுப்பில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ரயில்கலில் மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே..! இனி இந்த வசதியும் உண்டு..!

படுக்கை விரிப்புகள் வைப்பதற்கு பெட்டிகளிள் போதிய இடம் இல்லாததால் இந்த வகுப்புகளில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. எனவே, இனி மூன்றாம் ஏசி எக்கானமி வகுப்புகளில் 81, 82, 83 ஆகிய படுக்கைகள் படுக்கை விரிப்புகளை வைக்க பயன்படுத்தப்படுவதால் பயணிகள் இந்த படுக்கைகளை புக்கிங் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த சீட்டுகளில் புக்கிங் செய்தவர்களுக்கு எமர்ஜென்சி ஒதுக்கீடு படுக்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தைவானில் பயங்கர நிலநடுக்கம் …. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பதற்றம் நீடிக்கின்றது….

Sun Sep 18 , 2022
தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது இதனால்அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தைவானின் யூஜிங்கிற்கு கிழக்கே 7.2 என்ற அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் தலைமட்டமானது. இந்திய நேரப்படி மதியம் 2.44 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர் பல இடங்களில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் […]

You May Like