fbpx

2-வது முறை பாலியல் உறவுக்கு மறுப்பு..!! மனைவியை கொன்று உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டி தூக்கி வீசிய கணவன்..!!

இரண்டாவது முறை உடலுறவுக்கு ஒத்துழைக்காத மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனையும், உடந்தையாக இருந்த அவருடைய சகோதரனையும் போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (34). இவருடைய மனைவி ருக்‌ஷர் (30). கடந்த 2013இல் திருமணமான இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அம்ரொஹாவில் குடும்பத்துடன் வசித்து வரும் அன்வர், தனது வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவி ருக்‌ஷருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். உறவுக்கு பின்னர் மனைவி ருக்‌ஷர் அசதியில் உறங்கியுள்ளார். அப்போது, மீண்டும் உறவுக்கு வருமாறு ருக்‌ஷரை அன்வர் அழைத்துள்ளார். அதற்கு ருக்‌ஷர் முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

2-வது முறை பாலியல் உறவுக்கு மறுப்பு..!! மனைவியை கொன்று உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டி தூக்கி வீசிய கணவன்..!!

இதனால் ஆத்திரமடைந்த அன்வர், தனது மனைவியின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கொலை செய்த மனைவியின் தலை முடியை வெட்டியுள்ளார். பின்னர், உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டி தனது கிராமத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ரதுபுரா என்ற கிராமத்தில் சென்று வீசியுள்ளார். அதன் பின்னர், தனது மனைவியை காணவில்லை என நாடகமாடி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது, ரதுபுரா கிராமத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அன்வரின் மனைவி ருக்‌ஷர் என்பது தெரியவந்தது.

2-வது முறை பாலியல் உறவுக்கு மறுப்பு..!! மனைவியை கொன்று உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டி தூக்கி வீசிய கணவன்..!!

இதையடுத்து போலீசார், அன்வரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஒரே இரவில் இரண்டு முறை உறவுக்கு வர மறுத்ததால் மனைவியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அன்வர் ஒப்புக்கொண்டார். மேலும், இந்த கொலைக்கு அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அன்வர் மற்றும் டேனிஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

வானிலை மையம் சொன்ன அந்த டைம் வந்துருச்சா..? சென்னையில் கடல் சீற்றம்..!! பீதியில் பொதுமக்கள்..!!

Fri Dec 9 , 2022
‘மாண்டஸ்’ புயல் காரணமாக எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள ’மாண்டஸ்’ புயல், இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் கடற்கரை அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். எண்ணூர் விரைவு சாலை, பாரதியார் […]

You May Like