fbpx

6 கிலோமீட்டருக்கு ரூ.32 லட்சம் கட்டணமா? .. பயணிக்கு ஷாக் கொடுத்த ஊபர்..

வெறும் 6 கிலோ மீட்டருக்கு காரில் பயணித்த பிரிட்டிஷ் இளைஞருக்கு ஊபர் ரூ.32 லட்சம் கட்டணம் செலுத்த கோரியதால் பயணி அதிர்ச்சியடைந்தார்.

இங்கிலாந்தில் ஒருவர் ஊபர் வாடகை காரில் பயணித்துள்ளார். அப்போது அதற்கு கூடுதலாக பணம் கட் டவேண்டும் என ஊபரிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. நூறோ , இருநூறோ அதிகமாக வந்தால் பரவாயில்லை.. ரூ.32 லட்சம் அதிகமாக வந்தால் …. அதிர்ச்சியாகத்தானே இருக்கும். அப்படித்தான் பிரிட்டிஷ் இளைஞருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தான் வெறும் 6 கிலோ மீட்டர் தொலைவுக்குதான் பயணித்ததாகவும் அதற்கு ரூ.32 லட்சம் ரூபாய் ஏன் செலுத்த வேண்டும் என அவர் யோசித்துள்ளார். இதனிடையே கார் ஓட்டுனருக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

எனவே சற்றும் தாமதிக்காமல் ஊபரின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். பின்னர் தான் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்தது. ஆலிவர் காப்லான் என்ற 22 வயது இளைஞர்தான் இதில் பாதிக்கப்பட்டவர். 6 கி.மீ.க்கு சென்று மதுக்கடையில் இறங்குவதற்காக ஊபரை பதிவு செய்தார் ஆனால் அவருக்கு பில் வந்ததோ ரூ.32 லட்சம் .

அந்த பணத்தை அவரது அக்கவுண்டில் இருந்தும் தானாக பே செய்துவிட்டது. இதைக் கண்டவுடன் அவர் அதிர்ந்து போனார். உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியதும். அவர்கள் சரிபார்த்தனர். அப்போதுதான் ஏன் அவ்வளவு அதிகமாக  கட்டணம் வந்தது என்ற உண்மை தெரியவந்தது.

பிரிட்டனில் உள்ள ஆஸ்டன் பகுதிக்கு பதில் கூகுள் வரைபடத்தில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பகுதியில் உள்ள ஆஸ்டன் அண்டர் லைன் என்ற பகுதியை தேர்வு செய்துவிட்டது. இது 16000 கிலோ மீட்டர் என ஆட்டோமேட்டிக்காக கணித்துக் கொண்டது. இதனால் ஆலிவருக்கு கட்டணம் ரூ.32 லட்சம் வந்துள்ளதாக பதில் அளித்துள்ளது. உண்மையில் அவர் செலுத்த வேண்டியது வெறும் 900 ரூபாய்தான். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு பின்னர் மீதிப்பணத்தை அவரது வங்கிக் கணக்கிற்கே நிறுவனம் அனுப்பியது. மேலும் இந்த அசவுகரியத்திற்கு வருந்துவதாக மன்னிப்பும் கேட்டனர்.

Next Post

வாடிக்கையாளரின் தகவல்களை திருடிய செயலிகள் கண்டுபிடிப்பு…. ஃபேஸ்புக் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Sat Oct 8 , 2022
மீட்டாவின் ஃபேஸ்புக் நிறுவனம் , வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்களை திருடிய 400 ஆன்டிராய்டு  மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.   ஃபேஸ்புக் நிறுவனம் இது தொடர்பாக தனது பிளாகில் , ’’ ஃபேஸ்புக் நிறுவனம் சில முக்கிய தகவல்கள் அதாவது பாஸ்வேர்ட் மற்றும் உள்நுழைய பயன்படுத்தப்படும் யுசர்ஐடி போன்ற பல தகவல்களை ஆன்டிராய்டு, ஐ.ஓ.எஸ். உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டில் ஈடுபட்டதை ஃபேஸ்புக் நிறுவனம் […]

You May Like