காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால், 2 அனாதை இல்லங்களுக்கு பர்கர் வாங்கிக் கொடுக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் வசிக்கும் பெண் ஒருவர், தனது முன்னாள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதோடு தன்னைப் பின் தொடர்வதாகவும், மிரட்டி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால், 2 அனாதை இல்லங்களுக்கு அதாவது குறைந்தது 100 குழந்தைகளுக்கு நல்ல சுகாதாரமான முறையில் பர்கர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்ட முன்னாள் மனைவிக்கு ரூ.4.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவதற்கு முடிவு செய்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து வழக்கு நடந்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தையும், காவல்துறையின் நேரத்தையும் மனுதாரர் வீணடித்ததாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், புகார் கொடுத்த பெண்மணி வழக்கை திரும்ப பெறுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறியதால் தான் நீதிமன்றம் அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.