அரியானாவில் ராகிங் கொடுமையால் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் சன்ஸ்கர் சதுர்வேதி (19). விடுதியில் தங்கி வணிக நிர்வாகவியல் படிப்பு படித்து மாணவன் சன்ஸ்கர் சதுர்வேதி மர்மான முறையில் விடுதியில் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது. பின்னர் அங்கு விரைந்த அவர்கள், மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் கூறுகையில், ”கல்லூரியில் படித்த சக மாணவர்களின் ‘ராகிங்’ கொடுமையால் தான் தனது மகன் சன்ஸ்கர் சதுர்வேதி தற்கொலை செய்து கொண்டுள்ளான். பல்கலைக்கழகத்தில் ’ராகிங்’ அதிகமாக இருப்பதாக ஏற்கனவே தங்களிடம் தெரிவித்திருந்தார். இதனால், தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்தார். எனவே, சன்ஸ்கர் மரணத்தின் மர்மம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்”. இவ்வாறு தெரிவித்தனர்.