fbpx

Shocking..!! சாலை விபத்தில் சிக்கிய பிரபல டிவி நடிகை..!! துடிதுடித்து உயிரிழந்த சோகம்..!! பிரபலங்கள் இரங்கல்

பிரபல மராத்தி டிவி நடிகை கல்யாணி குராலே ஜாதவ், சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 32.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டிவி நடிகை கல்யாணி குராலே ஜாதவ் (வயது 32), துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஆவார். இவர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாங்லி-கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே, அவரது இரு சக்கர வாகனம் மீது டிராக்டர் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட  நடிகை கல்யாணி, பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்யாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Shocking..!! சாலை விபத்தில் சிக்கிய பிரபல டிவி நடிகை..!! துடிதுடித்து உயிரிழந்த சோகம்..!! பிரபலங்கள் இரங்கல்

நடிகை கல்யாணி குராலே ஜாதவ் விபத்தில் உயிரிழந்த செய்தி, அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களுடைய இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஷிரோலி காவல்நிலைய போலீசார், டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

'நான் ஏதோ பெருசா சாதனை பண்ணிட்டதா என்னை பாராட்டுறாங்க’..! ’இதுகெல்லாம் காரணம் இவரு தான்’..!!

Mon Nov 14 , 2022
இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த […]
'நான் ஏதோ பெருசா சாதனை பண்ணிட்டதா என்னை பாராட்டுறாங்க’..! ’இதுகெல்லாம் காரணம் இவரு தான்’..!!

You May Like