fbpx

அக்காவுக்கு பாலியல் தொல்லை..!! தம்பி உயிரோரு எரித்துக் கொலை..!! திடுக்கிடும் சம்பவம்..!! நடந்தது என்ன..?

ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத். ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய தந்தை மறைவுக்குப் பின், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்தான். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுவன் அமர்நாத், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பள்ளிக்கு காலை 5 மணிக்கு டியூஷன் செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்பியுள்ளான். அதன்பிறகு அவன் வீடு திரும்பவில்லை. அன்று வீட்டிலிருந்து கிளம்பிய அரை மணிநேரத்திற்குள், குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்த சிறுவன் அமர்நாத், யாரோ சிலர் தன்னைத் தாக்குவதாகக் கூறியுள்ளான்.

இதனால் குடும்பத்தினர் பதறிபோய் அங்கு சென்றுள்ளனர். அங்கு தீயில் எரிந்த நிலையில் கிடந்த சிறுவன் அமர்நாத்தை அவர்கள் மீட்டனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அப்போது பேசிய சிறுவன் அமர்நாத், சைக்கிளில் செல்லும்போது என்னை நிறுத்தி வாயில் துணிகளை வைத்து அடைத்தனர். என் கைகளைப் பின்னால் வைத்து, உடலை தார்பாய் வைத்து சுற்றியதுடன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். என்னைத் தாக்கியது வெங்கடேஸ்வர். அவருடன் உள்ள மற்ற மூவர் யார் என்று தெரியவில்லை, என்னை கொள்ளப்போகீறார்கள், எனக்கு இப்போது நடந்திருப்பது அவர்களுக்கும் நடக்க வேண்டும். அவர்களை விட்டுவிடாதீர்கள் என்றும் கூறியுள்ளான்.

பின்னர் சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அமர்நாத்தின் உயிர் பிரிந்திருக்கிறது. பின்னர் சிறுவன் கொலை தொடர்பாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, சிறுவன் அமர்நாத்தின் சகோதரி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வர் (23) என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் சகோதரி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் இந்த தகவல் சிறுவன் அமர்நாத்துக்கு தெரியவந்ததால் அவன், வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் வெங்கடேஸ்வராவை பிடித்து எச்சரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்து சிறுவனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் வெங்கடேஸ்வர் உயர் சாதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல் உயிரிழந்த அமர்நாத் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுவதால், இந்த வழக்கு அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி வெங்கடேஸ்வரா தலைமறைவான நிலையில், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Chella

Next Post

செந்தில் பாலாஜி குறித்த வழக்கு…..! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை…..!

Mon Jun 19 , 2023
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அங்கே அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் […]
சிக்கிய செந்தில் பாலாஜி..! சீறும் உச்சநீதிமன்றம்..! அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்கும் உத்தரவு..!

You May Like