fbpx

சகோதரிகள் வன்கொடுமை செய்து கொலை..! முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

பட்டியலினத்தை சேர்ந்த சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவனை போலீசார் இன்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர் .

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பட்டியலினத்தை சேர்ந்த சகோதரிகள், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பின்பு மரத்தில் தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சகோதரிகள் இருவரும் சிறுமிகள் என்றும் இதே கிராமத்தை சேர்ந்த சோட்டு என்பவருக்கு இந்த இருவரில் ஒருவரை தெரியும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் அந்த சகோதரிகளுக்கு சோட்டுதான் அறிமுகம் செய்து வைத்துள்ளார். கல்யாணம் செய்து கொள்வதற்கு இருவரும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கும்பல் சிறுமிகளை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

சகோதரிகள் வன்கொடுமை செய்து கொலை..! முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

இதனிடையே, சிறுமிகள் உயிரிழப்புக்கு நியாயம்கோரி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக சோட்டு, சுஹேல், ஜூனைது, ஹபிசுல் ரெஹ்மான், ஹரிமுதீன், மற்றும் ஆரிப் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஜூனைத் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சகோதரிகள் வன்கொடுமை செய்து கொலை..! முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதில், வயல்வெளியில் இருந்து ஜூனைத்தை போலீசார் 2 பேர் பிடித்து வருவது போன்றும், அவரது வலதுகாலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் வடிவதுபோன்றும் உள்ளது. ஜூனைத் தான் அந்த சிறுமிகளை அழைத்து வரசொன்னதாகவும், அதன்பேரில் சோட்டு அவர்களை கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் சிறுமிகளை கரும்பு தோட்டத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சகோதரிகள் வன்கொடுமை செய்து கொலை..! முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

இதையடுத்து, சிறுமிகள் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமிகளை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு..

Fri Sep 16 , 2022
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவத் தொடங்கிய பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகழுவுவது ஆகியவை நியூ நார்மலாக மாறிவிட்டன.. குறிப்பாக அதிக கூட்டம் கூடும் இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால், மக்கள் அதிகமாக கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. அந்த வகையில் சபரிமலை […]
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! கேரள அரசு புதிய கட்டுப்பாடு..!!

You May Like