fbpx

Sorry Girls My Wife Is Very Strict..!! வைரலாகும் ஆட்டோ ஓட்டுநர் எழுதிய வாசகம்..!! ஷாக்கான நெட்டிசன்கள்..!!

ஆட்டோக்களில் எழுதப்படும் வசனங்களுக்கு எப்போதுமே ஒரு தனி கவனம் இருக்கும். வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள், அனுபவங்களை சுருக்கமாக ஆட்டோக்களின் பின்புறம் எழுதினால் பெருமளவு பேசப்படும். அந்த வகையில், பெண்களிடம் மன்னிப்பு கேட்டு ஆட்டோ பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம் குறித்த போட்டோ ஒன்றுதான் ட்விட்டரில் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. அதில், “பெண்களே மன்னிச்சிருங்க. என் மனைவி ரொம்ப கடுமையானவர்” (Sorry Girls My Wife Is Very Strict) எனக் குறிப்பிட்டு பெண்களுக்கு தடை எனக் குறிக்கும் ஸ்டிக்கரையும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் பின்புறம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பான ஃபோட்டோவை வன்ஷிகா கார்க் என்ற பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “விசுவாசத்தின் உச்சம்” என பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு நெட்டிசன்களிடையே வைரலானதால், அந்த ஆட்டோ ஓட்டுநரின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள். சிலர் கிண்டலாகவும், நக்கலாகவும் கமெண்ட் செய்திருக்கிறார்கள். அதில், “பந்தயமே கட்டுகிறேன். இதனை கண்டிப்பாக அவரின் மனைவிதான் எழுதியிருப்பார்” என்றும், “அய்யோ.. அப்போ பெண்களெல்லாம் என்ன செய்வார்கள்?” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். மேலும் சிலர், இதேப்போன்ற வாசகத்தை டுவீலரிலும், காரிலும் பார்த்ததாக குறிப்பிட்டு ஃபோட்டோவோடும் பகிர்ந்திருக்கிறார்கள்.

Chella

Next Post

நோயாளியின் ஆணுறுப்பை துண்டித்த மருத்துவர்..!! என்ன காரணம் தெரியுமா..? திடுக்கிடும் தகவல்..!!

Tue Mar 7 , 2023
இத்தாலியில் உள்ள நோயாளி ஒருவர், சிறுநீரக மருத்துவரிடம் 400,000 யூரோ இழப்பீடு கோருகிறார். அது ஏன் என்பதே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மருத்துவர்களால் ஆணுறுப்பு தவறாக துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் இத்தாலியை சேர்ந்த நபர் 400,000 யூரோ (£354,000) இழப்பீடு கோருகிறார். அறுவை சிகிச்சையின் போது, மருத்துவ நிபுணர்கள் அவரின் பிறப்புறுப்பை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில், அவர்கள் உறுப்பில் புற்றுநோயைக் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. உண்மையில் அந்த பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு வகை […]

You May Like