fbpx

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென புகை… ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கம் !!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு ஏற்பட்டதால் திடீரென புகை சூழ்ந்தது இதனால் ஐதராபாத்தில் தயைிறக்கப்பட்டது.

கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீரென புகை மூட்டம் சூழ்ந்தது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் புகை மண்டலமானது. இதையடுத்து விமானத்தின் காக்பிட் இதை கண்டறிந்து சமிக்ஞை அனுப்பியது எனவே ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. எனினும் பயணிகள் பீதியடைந்தனர்.

அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவர் மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவர் உடலில் கீறல்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். புகை சூழ்ந்த விமானத்தில் இறங்கும் போது கால்களை இடித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் அடிக்கடி இது போல பழுதாவது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்துகின்றது. பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தோம் . இறங்கும் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார். இது முழுக்க முழுக்க குழுவினரின் அலட்சியத்தால் இது போன்று நடந்தது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Next Post

எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு செல்லும் முக்கிய புள்ளி?

Thu Oct 13 , 2022
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது முதல் அவருக்கு சாதகமாகவே அனைத்தும் இருந்தது இந்நிலையில் ஒவ்வொருவராக ஓ.பி.எஸ். அணிக்கு தாவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து மைத்ரேயனும் எடப்பாடி அணியில் இருந்து தாவினார். என்னடா ஒவ்வொரு விக்கெட்டா விழுதே என நினைக்கும் வேளையில் தற்போது மேலும் ஒரு குண்டு வெடிக்க உள்ளது. கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் ஓ.பி.எஸ். அணியில் சேரப்போவதாக தகவல்கள் கசிந்த […]

You May Like