வருகிற ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கவுள்ளது. 2023ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்றம் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் பல்வேறு நல்ல செய்திகளை அவர்கள் பெறக்கூடும். வருடத்தின் துவக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு எனும் பெரிய பரிசை அவர்கள் பெற இருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களின் நன்மையை கருதி அரசானது 3 முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது.

இதில் மிகப் பெரிய நன்மை ஊதியத்தின் வடிவில் கிடைக்கும். பிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றத்துக்கான கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாகவும் 2023ஆம் வருடம் அரசு முடிவெடுக்கக் கூடும். 2024 தேர்தலுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு பல்வேறு பரிசுகளை வழங்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது தவிர்த்து அகவிலைப்படி, பழைய ஓய்வூதியத்திட்டம் பற்றியும் முடிவெடுக்கப்படலாம். ஊழியர்களின் ஊதியத்தில் ரூபாய் 8,000 உயர்த்துவது பற்றி அரசாங்கம் நேரடியாக பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது. பிட்மென்ட் பாக்டரை அதிகரிப்பதன் வாயிலாக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசு பலப்படுத்த முடியும்.