திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிலிண்டர்கள் வெடித்து இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்காக உணவு தயார் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு திடீரென சிலிண்டர் பலத்த சத்ததுடன் வெடித்தது. அப்போது, அருகில் இருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.