fbpx

மருமகனுக்கு 125 உணவு வகைகளுடன் தடபுடல் விருந்து..!! அசத்திய மாமியார்…!! பாராட்டிய மாப்பிள்ளை..!!

வருங்கால மருமகனுக்கு 125 வகையான பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தியுள்ளார் மாமியார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி தம்பதியின் மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, பெண் வீட்டுக்கு வந்தார் புதுமாப்பிள்ளை சைதன்யா.

மருமகனுக்கு 125 உணவு வகைகளுடன் தடபுடல் விருந்து..!! அசத்திய மாமியார்...!! பாராட்டிய மாப்பிள்ளை..!!

அப்போது, அவருக்கு 125 வகையான பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தினார் மாமியார். அவற்றை சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து விட்டார் மாப்பிள்ளை சைதன்யா. இதில், பல உணவு வகைகளின் பெயர் கூட அவருக்குத் தெரியாதாம். ஆனால், ருசியாக உள்ளது என வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக பாராட்டினார் சைதன்யா.

மருமகனுக்கு 125 உணவு வகைகளுடன் தடபுடல் விருந்து..!! அசத்திய மாமியார்...!! பாராட்டிய மாப்பிள்ளை..!!

Chella

Next Post

50 வயது பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்..!! கூட்டு வன்கொடுமை செய்து பிறப்புறுப்பில் தாக்கிய கொடூரம்..!!

Sat Oct 8 , 2022
50 வயது பெண்ணை இரண்டு காவலர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வழக்கம் போல விவசாய வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள வயல் பகுதியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குடிபோதையில் இருந்த காவல்துறையினர் இருவர் அங்கு வந்துள்ளனர். போதையில் தனியாக இருந்த […]

You May Like