தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவி மருத்தவர் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படும் என்று தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
உதவி அறுவை சிகிச்சை பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் பிற மாநிலத்தவர்களை தவிர்க்கும் விதமாக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு புறம் தேர்வு வாரியத்தின் இந்த முயற்சி தமிழ் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றாலும், தமிழகத்தில் பிற மொழிப் பாடங்களை தேர்வு செய்து மருத்துவத்துறையில் கால்பதிக்கும் மாணவர்களும் உள்ளனர். இது சற்று சிரமமாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. எனவே இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.