ரேஷன் கடைகளை மாற்றியமைப்பதற்கான சிறந்த நடைமுறைகளில் ஒன்று தமிழக அரசு என நிரூபித்துள்ளது என பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசை மத்திய அரசு புழ்ந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகள் சிறந்த மாற்றங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இது நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது எனவும் கூடுதல் வருவாய் வழிகளை ஆராய மற்ற மாநிலங்கள் வேறு வழிகளை ஆராய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உணவுத்துறைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் மத்தியஅஉணவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரேஷன் கடைகள் மாற்றம் சிறந்த நடைமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பொருட்களை விற்பனை செய்வது போன்ற பல முயற்சிகளை எடுத்துரைத்துள்ளது. சர்க்கரை, சிறுதானியங்கள், தினைகள், மளிகை பொருட்கள், போன்றவை குறைந்த விலையில் விற்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாயும் கிடைக்கும் பயனாளிகள் குறைந்த விலையில் அனுபவிக்க முடியும். தமிழகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இது போல புதிய கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுங்கள். என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோதுமை கொள்முதலில் கடந்த ஆண்டு குறைவாக இருந்ததாகவும் அடுத்த 2023-24ல் சந்தைப்படுத்தப்படுதல் சரியான நேரத்தில் விதையிடுதல், கோதுமையை சிறப்பாக கொள்முதல் செய்தல் போன்றவை பற்றிமாநிலங்கள் சிறப்பாக செய்ய வேண்டும். கொள்முதல் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். 2022-23 காரிஃப் சந்தைப்படுத்துதல் பருவத்த்திற்கான குறிப்பிட்ட காலத்திற்குள் நெல் கொள்முதல் மற்றும் அரைக்கும் செயல்பாடுகளை முடிக்கவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.