fbpx

தீபாவளி நாளில் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்.. ரூ.1.49கோடி வசூல்…

ஹாசனாம்பா கோவிலில் தரிசன டிக்கெட் , பிரசாதம் விற்பனை மூலம் 10 நாட்களில் ரூ.1.49 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில் . தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் மட்டுமே இக்கோயிலின் நடை திறந்திருக்கும். இம்முறை கடந்த 13ம் தேதி ஹாசனாம்பா கோயில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தரிசனம் செய்து வந்தனர்.
கொரோனா காலக்கட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக கோயில் நடை திறக்க அனுமதிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட இக்கோயில் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் நேரடி தரிசனத்திற்காக ரூ.1000 , ரூ..300 டிக்கெட்ஙடகள் விற்பனை செய்யப்பட்டது. லட்டு பிரசாதமும் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் கோவிலுக்கு ஒரு கோடியே 49 லட்சத்து 29 ஆயிரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சூரிய கிரகணம் என்பதால் ஒரு நாள் நடை திறக்கப்படவில்லை. இன்று வழக்கம் போல சாமி தரிசனம் நடைபெற்று வரும் நிலையில் நாளை சாமிதரிசனத்திற்கு கடைசி நாள். இத்துடன் அடுத்த ஆண்டுதான் ஹாசனாம்பா கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Next Post

செவிலியர்களுக்கு குட்நியூஸ் : காலிப்பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும்...

Wed Oct 26 , 2022
தமிழகத்தில் இன்னும் இரண்டே மாதத்தில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் […]

You May Like