அண்ணியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் காக்குவாரிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (38). இவரது தம்பி பிரதாப் (25). இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பிரதாப்பின் மனைவி பிரசவத்தின்போது இறந்து விட்டார். இதனால் பாலாஜி, பிரதாப்பை தனது வீட்டில் தங்க அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்நிலையில், பிரதாப் தனது அண்ணியுடன் நெருங்கி பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் வீட்டில் அண்ணியுடன் பிரதாப் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்த பாலாஜி கடும் ஆத்திரமடைந்தார்.

பின்னர், கோபத்தில் அங்கிருந்த உருட்டுக்கட்டை எடுத்து தம்பி பிரதாப்பை சரமாரி தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாலாஜியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.