fbpx

இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு முதலாளியை தீர்த்துக் கட்டிய கொடூரம்..!! விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

தெலங்கானா மாநிலம் ஃபரூக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஷபதி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பிஷபதியின் இன்சூரன்ஸ் பணத்திற்காக அவருக்கு கீழ் பணியாற்றிய ஸ்ரீகாந்த், சதீஷ், சம்மன்னா மற்றும் வீட்டின் காவலாளி உட்பட 4 பேரும் அவரை திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் அம்பலாமாகியுள்ளது. ஸ்ரீகாந்த் தான் நடத்தி வந்த நிறுவனத்தின் மூலம் கிரெட் கார்டு, ஆதார் கார்டுகளை வைத்து லோன் வாங்கிக் கொடுத்து பணம் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த 2020 அக்டோபர் மாதம் பிஷபதி நிறுவனத்தில் ஸ்ரீகாந்த் சேர்ந்துள்ளார். அப்போது பிஷபதி பெயரில் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து தன்னை நாமினியாக சேர்த்துள்ளார் ஸ்ரீகாந்த்.

இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு முதலாளியை தீர்த்துக் கட்டிய கொடூரம்..!! விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

இதனையடுத்து, பிப்ரவரியில் ஸ்ரீகாந்த் தன்னுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி பிஷபதியின் பெயரி கடன் வாங்கி தனக்கென ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார். பின்னர் பிஷபதிக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாததால் அவரை கொலை செய்துவிட்டு, இன்சூரன்ஸ் பணத்தை பெறுவது குறித்து திட்டம் போட்டுள்ளார். அதன்படி, ஸ்ரீகாந்த், சதீஷ், சம்மன்னா, காவலாளி ஆகியோர் பிஷபதியை நன்றாக மது குடிக்க வைத்து காரில் அழைத்துச் சென்று தலையில் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், கார் ஏற்றியது போல செட் ஆப் செய்துவிட்டு, அவரின் அடையாள அட்டையும் விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், பிஷபதி இன்சூரஸ்சை பெற முயற்சிக்கு நடவடிக்கைகளை காப்பீட்டு நிறுவனம் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இத்தகைய கொலை சம்பவம் ஓராண்டு பின்னர் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

பிரியாணி பிரியர்களே ஷாக்கிங் நியூஸ்..!! இனி இந்த அரிசிக்கு தடையாம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Thu Jan 12 , 2023
பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி என்றால் அது பாசுமதி அரிசி தான். இது இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்கப்படுகிறது. அங்கு விளையும் நீளமான மற்றும் மணமுள்ள அரிசி மட்டுமே ஒரிஜினல் பாசுமதி அரிசி. ஆனால், ஒரு சில இடங்களில் செயற்கையாக அரிசிக்கு நிறமூட்டி, செயற்கை மனம் செலுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது அரசு உணவு தர பாதுகாப்பு […]

You May Like