fbpx

சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு..!!

தற்போது செல்போன் மூலமாக கடன் பெறக்கூடிய பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயலிகள் பற்றிய விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்களை பற்றிய விவரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் வாங்கியவர்களை செல்போன் மூலம் தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களை செய்கின்றனர்.சட்டவிரோததற்போது செல்போன் மூலமாக கடன் பெறக்கூடிய பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த செயலிகள் பற்றிய விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்களை பற்றிய விவரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் வாங்கியவர்களை செல்போன் மூலம் தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களை செய்கின்றனர். இத்தகைய செயலினால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்கு உள்ளாகின்றனர். இதனால் இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தமிழகம், ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இந்த செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என புகார் தொடர்ந்து வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கிச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் செயலிகள் மட்டுமே இனி ஆப் ஸ்டோரில் அனுமதிக்கப்படும்.என்று தகவல் வெளியாகியுள்ளது.

Baskar

Next Post

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு திடீரென ஒத்திவைப்பு..! புதிய தேதி அறிவிப்பு..! - டிஎன்பிஎஸ்சி

Fri Sep 9 , 2022
நிர்வாகக் காரணங்களுக்காக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 […]

You May Like