பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.22000 கோடி நிவாரணமாக வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கு தங்கள் பட்ஜெட்டில் மிகப்பெரிய செலவான சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருந்தது. 2020 முதல் 2022 வரை குறைத்து விற்பனை செய்ததால் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள இழப்பை சந்தித்தன. எனவே மாநிலத்தில் செயல்படும் 3 குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியன் எண்ணெய் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆகிய 3 நிறுவனங்களுக்கு மட்டும் இந்த நிதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த விலையில் இந்த மூன்று நிறுவனங்களும் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகின்றது.
எல்.பி.ஜி. விலை 2020 முதல் 2022 ம் ஆண்டுகளில் இடையில் 300 சதவீதம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் சர்வதேச விலையில் ஏற்ற இறக்கங்களில் இருந்து நுகர்வோருக்கு செலவினத்தை கட்டுப்படுத்த முழுமையான விலை உயர்வை அளிக்காமல் இருந்தது. அதன்படி உள்நாட்டு எல்.பி.ஜி. விலை 72 சதவீதம் தான் உயர்த்தப்பட்டிருக்கின்றது. இதனால்இந்த மூன்று நிறுவனங்களும் இழப்பை சந்தித்தன. எனினும்அத்தியாவசிய சமையல் எரிபொருளின் தொடர்ச்சியான விநியோகத்தை செய்துள்ளது. எனவே எல்பிஜியில்இந்த இழப்புக்கு மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் மத்திய அமைச்சரவை ரூ.22 ஆயிரம் கோடி மானியமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் எல்பிஜி விலை அதிகரித்து வருகின்றது. விலைவாசி உயர்வின் பாரம் சாமானிய மக்கள் மீது விழுந்து விடக்கூடாது என்பதற்காக பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு ஒரு முறையில் ரூ.22 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது என்று அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு எல்பிஜி சிலிண்டரை மக்களுக்கு தடையின்றி வழங்கவும் மேக் இன் இந்தியா தயாரிப்புகளை கொள்முதலை ஆதரிக்க உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
அமைச்சரவையின் முக்கிய அம்சங்கள் – ரயில்வே ஊழியர்கள் 11.27 லட்சம் ஊழியர்களுக்கு உற்பத்தி திறனுடன் இணைக்கப்பட்ட போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும் எனவும். இது 78 நாட்களுக்கு போனசாகவும் , அதிகபட்ச வரம்பாக ரூ.17951 ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களின் கூட்டுறவு சட்டம் 2022 ல் திருத்தம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 97வது அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளை உள்ளடக்கியுள்ளது. 2022-23 முதல் 2025 – 26 வரையிலான 15வது நிதிக்குழுவின் மீதம் உள்ள நான்கு ஆண்டுகளுக்கு வடகிழக்கு பகுதி மாகாணங்களுக்கு புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.