fbpx

காதலியை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடத்தில் வீசிய கொடூரன்…

காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு சுற்றித்திரிந்த நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தவர் ஷ்ரத்தா(26). ஷ்ரத்தா ஒரு கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். மும்பையில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவரும் ஷ்ரத்தாவும்  சந்தித்துள்ளனர். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலானது. இருவரும் டேட்டிங், தனிமையில் உல்லாசம் என இருந்தனர். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  

இதையடுத்து இருவரும் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டனர். இது தெரிந்ததும் பெற்றோர்களுடன் பேச்சை நிறுத்திவிட்டார். பின்னர் யாருக்கும் சொல்லாமல் டெல்லிக்கு புறப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எந்த பதிவும் இல்லை. இதனால் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவரது தந்தை டெல்லிக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டியிருந்தது. இதையடுத்து தனது மகளை காணவில்லை என போலீசுக்கு புகார் கொடுத்தார். தனது மகள் ஒரு வாலிபருடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்தார். அப்தாப் இதற்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது வேறொரு வேலை வாங்கிக் கொண்டு மும்பையில் குடியேறியது தெரியவந்தது. இவர்கள் இருவரும் டேட்டிங் செயலியில் தான் பேசி பழகியுள்ளனர். பின்னர் டெல்லியிலும் அதை தொடர்ந்துள்ளனர் என்று டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு பகுதிகளில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. பிணத்தை அடைத்து வைக்க புதிய குளிர்சாதன பெட்டியையும் அந்த இளைஞர் வாங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் பின்னர் அவரை கைது செய்து போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Next Post

சூப்பர் நியூஸ்...! பயிர்‌ காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு....! ஆட்சியர் அறிவிப்பு

Tue Nov 15 , 2022
சேலம்‌ மாவட்ட விவசாயிகள்‌ வேளாண்‌ பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டுத் திட்டத்தில்‌ பயிர்‌ காப்பீடு செய்து பயன்பெறலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் ; பருவ மழை காலங்களில்‌ வெள்ளம்‌, புயல்‌ மற்றும்‌ இயற்கை சீற்றங்களினால்‌ விவசாய பெருங்குடி மக்கள்‌ பாதிக்கும்‌ பொழுது விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தையும்‌, வருமானத்தையும்‌ பாதுகாத்திடும்‌ வகையில்‌ 2022 – 2023 ஆம்‌ ஆண்டில்‌, பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தை செயல்படுத்துவதற்கான […]

You May Like