95 வயது முதாட்டியின் இறுதிச்சடங்கில் குரூப் போட்டோ எடுத்து, குடும்பத்தினர் அவருக்கு பிரியா விடை அளித்த நிகழ்வு தற்போது பேசுபொருளாகி உள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் மரியம்மா. மறைந்த பாதிரியார் பி.ஓ.வர்கீசின் மனைவியான இவர், வயது மூப்பு காரணமாக கடந்த வாரம் காலமானார். அவருக்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இந்த இறுதிச்சடங்கில், மரியம்மாவின் 9 மகன், மகள்களும் குடும்பத்துடன் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் அனைவரும் மரியம்மாவின் உடலுக்கு அருகே அமர்ந்து சிரித்த முகத்துடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் விமர்சனத்திற்கும் உள்ளானது. இதற்கு விளக்கம் அளித்துள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர், வாழும்போது சிறப்பான வாழ்க்கை வாழ்ந்த மரிம்மாளின் ஆன்மா சொர்க்கத்துக்கு சென்றது என தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார். அதன் பொருட்டே சிரித்த முகத்துடன் அவரை வழியனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.