fbpx

செவிலியரை கட்டிப்போட்டு முட்டிபோட வைத்த கும்பல்..!! சுகாதார மையத்திற்கு சுகம் தேடி வந்த கொடூரன்கள்..!!

சத்தீஸ்கர் சுகாதார மையத்தில் வைத்து செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாவட்டத்தில் சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் கொரியா மாவட்டம் பரடோல் கிராமத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், அந்த சுகாதார மையம் நேற்று முன்தினம் மதியம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த செவிலியர் பணி முடிந்து மையத்தில் இருந்து வெளியே வந்ததும், அங்கிருந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த பெண்ணை ஒரு ரூமில் அடைத்து வைத்து கயிற்றால் கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

செவிலியரை கட்டிப்போட்டு முட்டிபோட வைத்த கும்பல்..!! சுகாதார மையத்திற்கு சுகம் தேடி வந்த கொடூரன்கள்..!!

பின்னர், நடந்ததை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரித்துள்ளனர். ஆனால், அந்த பெண் தனது வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர். 3 பேர் கொண்ட கும்பல் முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 3 நபர்கள் யார் என்பது தெரியவில்லை. அந்த மையத்தில் வேலை செய்பவர்களா? அல்லது வேறு யாராவதா என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

Chella

Next Post

மருமகளை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்திய கொடுமை.. நரபலி சம்பவத்தை தொடர்ந்து கொடுமை.!

Sun Oct 23 , 2022
நோயை குணப்படுத்த நிர்வாண பூஜையை செய்யவேண்டும் என்று மருமகளை கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யபாபு (36) என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சத்யபாபு குடும்பத்தினர் மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்துள்ளனர். திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்களது வீட்டிற்கு சில மந்திரவாதிகள் வந்து சத்யபாபு வீட்டில் தீய சக்தி இருக்கிறது என்றும், அதனை […]
’எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க’..!! பரிகார பூஜையால் பறிபோன நகை, பணம்..!! மொத்தமும் அபேஸ்..!!

You May Like