fbpx

டேய் வண்டி முட்டுதா பாரு! ஷோ ரூமிலிருந்து கொண்டு வந்த புது நெக்சான் கார்… என்ன ஆச்சுன்னு பாருங்க?…

கார் ஷோ ரூமில்இருந்து கொண்டு வந்த புது நெக்சானை வரவேற்க ஆசையாய் காத்திருந்த கணவர் மனைவி காரை கொண்டு வந்து கவிழ்த்த சம்பவத்தால் கணவர் அதிர்ந்து போனார்.

புதியா கார் ஒன்றை கணவரும் மனைவியும் சேர்ந்து வாங்கியுள்ளனர். ஷோ ரூமில்இருந்து வாங்கிய பின்னர் அவர்கள் தங்கள் அப்பார்ட்மென்டில் பார்க் செய்ய உள்ளே கொண்டு வர நினைத்துள்ளனர். கணவர் கேட்டை திறந்து நின்று கொண்டு மனைவிக்கு வழிகாட்டியுள்ளார். பின்னர் மனைவி அந்த காரை ஓட்டி வந்துள்ளார். அதேசமயத்தில் அந்த அப்பார்ட்மென்டின் இடதுபுறம் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இடது பக்கம் திரும்பி மெதுவாக வந்த நிலையில் திடீரென கார் இருசக்கர வாகனங்ள் மீது ஏற்றி பின்னர் காரும் கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் பதறிப்போய் ஓடி வந்து உதவி செய்தார். எனினும் புது காரும் , 10க்கும் மேற்பட்ட பைக்குகளும் சேதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வரும் நிலையில் எங்கு நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

அதே நிலையில் காரை ஓட்டிய மனைவி முறையான பயிற்சி இல்லாமல் காரை இயக்கியதால்தான் இது நடந்துள்ளது என்று நெட்டிசன்கள் வறுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தை கிண்டலடித்து அதற்கு இணையான தமிழ் திரைப்பட காமெடி காட்சியையும் பதிவிட்டு வருகின்றனர்.

’வாட் எ கிராண்ட் வெல்கம் ’ என பதிவிட்டுள்ளதற்கு  ஓட்டிய பெண்ணுக்கும் அறிவுரை வழங்கி வருகின்றனர். நான் இந்த கார் ஓனருக்காக வருந்துகின்றேன். நிறை ஆர்டிஓ ஆய்வாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி செய்து விடுகின்றனர். இதனால் இப்படி எல்லாம் நடக்கின்றது. என பதிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Next Post

மொபைல் உலகின் அடுத்த பிரம்மாண்டம்… 200 எம்.பி. கேமரா கொண்ட செல்போன் ….

Sat Oct 8 , 2022
மொபைல் உலகின் அடுத்த பிரம்மாண்டமாக 200 மெகா பிக்சல் கேமரா கொண்ட 180 w கிர்ஜிங் வசதியுடன் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் தரமான செல்போன்களை வழங்கி வருகின்றது.அந்த வகையில் இன்பினிக்ஸ் நோட் ப்ரோ 12 , இன்பினிக்ஸ் ஜீரோ 5 ஜி , போன்ற செல்போன்கள் 5 ஜி வசதியுடன் அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளனது. 6.8 இன்ச் 3D FHD+ […]

You May Like