fbpx

கோப்புகளை கீழே தள்ளிவிட்டு குவாட்டர் பாட்டில்களை அடுக்கிய போலீஸ்..! சர்ச்சை வீடியோ

காவல்நிலையத்தில் 3 போலீசார், மது குடிப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்கு உட்பட்டது கவுலிப்பள்ளி காவல் நிலையம். இந்த காவல்நிலையத்தில் நேற்றிரவு பணியிலிருந்த 3 போலீசார், மேஜை மீது இருந்து புகார் கோப்புகளைக் கீழே தள்ளிவிட்டு, அதில் மது பாட்டில்களை அடிக்கி வைத்துள்ளனர். பின்னர், அவர்கள் மூன்று பேரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதையில் இவர்களே தங்கள் மது குடிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புகளை கீழே தள்ளிவிட்டு குவாட்டர் பாட்டில்களை அடுக்கிய போலீஸ்..! சர்ச்சை வீடியோ

இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும் காவல்நிலையத்தில் மது குடித்த 3 போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், குற்றங்களைத் தடுக்கும் போலீசாரே குற்றச் செயலில் ஈடுபடுவது நியாயமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கர்நாடகா டி.ஜி.பி தெரிவித்துள்ளார். வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழிக்குக் கர்நாடக போலீசாரின் இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நாயை ஓடும் காரில் கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர் கைது! ….

Mon Sep 19 , 2022
ராஜஸ்தானில் ஓடும் காரில் நாயை கட்டி சாலையில் இழுத்துச் சென்று மருத்துவர் கொடுமைப்படுத்துவதாக வீடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ரஜ்னீஷ் குவாலா. இவர் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகின்றார். நேற்று நாய் ஒன்றை காரில் கட்டி தர தர வென இழுத்துச் சென்றுள்ளார். அதை வீடியோ எடுத்த நபர்கள் சமூக வலைத்தலங்களில் பதிவிட்டார். இதையடுத்து அந்த வீடியோ வைரலானது. நாயை […]

You May Like