fbpx

திருப்பதி கோயில் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?

திருப்பதி திருமலை கோயிலுக்கு சொந்தமான பணம், சொத்து, கையிருப்பு மற்றும் தங்க இருப்பு பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பணம் கையிருப்பு மற்றும் எவ்வளவு தங்கம், சொத்து உள்ளது என்பது பற்றிய தகவலை வெள்ளை அறிக்கையாக தேவஸ்தன நிர்வாகம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது’’ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.3 டன் தங்கமும், ரூ.15,938 கோடி பணமும் டெபாசிட் ஆகி உள்ளது. கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசு செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக சமூக வலைத்தலங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த தகவல் உண்மை கிடையாது. இவற்றை பக்தர்கள் நம்ப வேண்டாம். உபரி வருமானம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் மொத்தம் சொத்து ரூ.2.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ.15,938 கோடியாக உள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் திருமலை திருப்பதி கோவிலில் முதலீடு ரூ.2,900 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்வேறு வங்கிகளில் 7339.74 டன் தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 2.9 டன் தங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. 

மொத்தம் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக ரூ.5,300 கோடி மதிப்பில் 10.3 டன் தங்கம் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ரொக்கமாக ரூ.15, 938 கோடி உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் 7,123 ஏக்கரில் சொத்துக்கள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

எப்படியாவது கண்டுபுடுச்சர்ராய்ங்களே!! விஜய் பாட்டு… தொடரும் ட்ரோல்…

Sun Nov 6 , 2022
நடிகர் விஜய் பாடி நேற்று வெளியான ’’ரஞ்சிதமே, ரஞ்சிதமே’’ பாடல் ஏற்கனவே வெளியான திரைப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட மெட்டுதான் என்று தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ள நிலையில் அது பழைய பாடலின் காப்பி எனவும், தெலுங்கில் கலக்கி வரும் இசையமைப்பாளர் தமன், தமிழுக்கு மட்டும் காபி  பாடலை கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து […]

You May Like