இரண்டு மாநிலங்கள் இந்தியாவில் 21 வயது தொடங்குவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
திருமணம் நடைபெறும் வயதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகர் சமீபத்தில் மக்கள் தொகை மாநிலக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் 21 வயது தொடங்குவதற்கு முன்பாகவே திருமணம் செய்து வைக்கின்றனர். இம்மாநிலம் மாந்திரீகம் செய்ய கொலை செய்யும் ஒரு மாநிலம் என பலமுறை செய்திகள் வெளியாகி உள்ள. 21 வயதுக்கு முன்பே பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதிலும் தற்போது முன்னிலை வகிக்கின்றது என்பது வருத்தமான செயலாக உள்ளது.
18 வயதிற்குள் திருமணம் செய்து வைப்பதில் 1.9 சதவீதமாகவும், கேரளா 0.0 சதவீதமாகவும் ஜார்கண்ட் மாநிலம் 5.8 ஆக உள்ளது என உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் 7.3 சதவீதம் திருமணங்கள் கிராமப்புறங்கிலும் 3 சதவீதம் திருமணங்கள் நகர்ப்புறங்களிலும் நடைபெறுகின்றது. ஜார்கண்ட் மற்றும்மேற்கு வங்கம் இரண்டு மாநிலங்களிலும் இது அதிகம் நடைபெற்று வருவதாகவும் கணக்கீட்டின் முடிவில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் 54.9 சதவீதம் பெண்குழந்தைகள் 21 வயதிற்கு முன்பு திருமணம் செய்து கொள்கின்றார்கள். ஜார்கண்டில்இந்த எண்ணிக்கை 54.9சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் சராசரியாக 29.5 ஆக உள்ளது.