fbpx

சென்னை-மைசூரு இடையே சீறிப்பாய்ந்த வந்தே பாரத் ரயில்…

இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னை-மைசூரு இடையே தொடங்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவை காலை 10.5 மணிக்கு வந்தடைந்தது.

சென்னையில் அதிவேக ரயில் ’வந்தே பாரத்’ சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 130-73 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சேவை தமிழகத்திற்கு முதன் முதலில் வருவதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்த ரயில் 6 மணி நேரம் 40 நிமிடத்தில் 504 கிலோ மீட்டர் தூரத்தை வெகுவிரைவாக கடக்கும் . சென்னையில் இருந்த மைசூருவுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சேவையை வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். தற்போது புது டெல்லி, வாரணாசி, மும்பை,அகமதாபாத், குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய 4 வழித்தடங்களில் சீராக இயங்கப்பட்டு வருகிறது.

காலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் அரக்கோணம் வரை 130 கி.மீ. வேகத்தில் சென்றது.காலை 8.50 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும், 10.25க்கு பெங்களூரு ரயில் நிலையத்தையும் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 5 நிமிடங்கள் நின்ற பின்னர் 10.30க்கு புறப்பட்டு 12.30 மணிக்கு மைசூருவை அடையும்.

மைசூருவில் இருந்து 1 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு 4.45க்கு வந்தடையும் சென்னைக்கு 7.45 மணிக்கு வந்தடைகின்றது.

Next Post

விராட்கோலிக்கு திடீரென என்ன ஆச்சு? ரசிகர்கள் பதற்றம்!!

Mon Nov 7 , 2022
விராட்கோலி ஜிம்பாம்வே உடனான போட்டியில் ஒரு கணம் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு நின்ற வீடியோ வைரலாகி வருகின்றது. டி20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே-இந்தியா நேற்று விளையாடியது. இதில் சிறந்த ரன்னரான விராட் கோலி விளையாடினார். ரன் எடுப்பதில் இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. இந்த சூழலில் பலர் ஓட முடியாமல் தோற்றுப்போய் உள்ளனர். அந்தஅளவுக்கு விராட் கோலி ஓடுவார். இந்நிலையில் நேற்றை ஆட்டத்தில் 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். […]

You May Like