fbpx

என்னடா இதுசோதனை !மேலும் மேலும் கோளாறாகும் ’வந்தேபாரத் ’ ரயில் … சக்கரங்கள் ஜாமானாதால் பயணிகள் தவிப்பு ….

தொடர்ந்து -3வது நாளாக வந்தேபாரத் ரயில் கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றதால் பயணிகள் இன்றும் பாதிவழியில் தவித்தனர்.

வாரணாசிக்கு செல்லும் வந்தே பாரத் சக்கரங்கள் ’ஜாமானதால் ரயில் பாதிவழியில் நின்றது. நேற்று முன்தினம் எருமை மாடு மோதியதில் முன்பக்கம் தகர்ந்தது. நேற்று காளை மாடு மோதியதில் ரயில் சேதமடைந்தது. இன்று சக்கரங்கள் ஜாமாகி கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றது.

காந்திநகர் – மும்பை இடையே கடந்த செப்டம்பர் 29ம் தேதி தொடங்கப்பட்டது. அதிவேக ரயிலான வந்தேபாரத் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இலக்கை அடையும். ஜப்பான் ரயிலை விட 2 நிமிடத்திற்கு முன்பே இலக்கை அடையும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வந்தேபாரத் செய்திகளில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.

மோட்டார் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு சக்கரம் ஜாம்ஆனது. இதை ’’ப்ளாட் டையர் ’’ என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இதனால் காலை 6 மணிக்கு புறப்பட்ட ரயில் 90 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சென்றது. பின்னர் உத்தரபிரதேசத்தில் குர்ஜா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். அதில் பயணித்த 1068 பேரும் டெல்லியில் இருந்து சதாப்தி விரைவு  ரயில் கொண்டுவரப்பட்டு மதியம் 12.40 மணி அளவில் பயணிகளை ஏற்றிச் சென்றது.

இது தொடர்பாக வட மத்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. டான்கவு – வைர் ரயில் நிலையங்களுக்கு இடையே சி8 பெட்டியில் டிராக்‌ஷன் இழுவை மோட்டார் பழுது ஏற்பட்டு சக்கரம் ஜாம் ஆனது. இதனால் தோல்வி ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இழுவை மோட்டார் என்பது என்ஜின்கள் , எலக்ட்ரிக் அல்லது ஹைட்ரஜன் வாகனங்கள் , லிப்ட் அல்லது எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்டுகள் போன்ற அமைப்பின் உந்துதலுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சார மோட்டார் ஆகும்.

அதிவேக ரயில்களின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு இழுவை மோட்டார் தாங்கு உருளைகள் மிக முக்கியம் என்பது பொறியாளர்களின் கருத்து. ஆனால் , மிகவும் பாதிக்கப்படக்கூடிய பாகமும் கூட . மேலும் இது அதிக விபத்துக்களை ஏற்படுத்துமாம். நல்லவேளையாக பாதியில் ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறுகின்றனர்.

தாத்ரி ரயில் நிலையத்தை சரியாக 6.38 மணிக்கு ரயில் கடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லெவல் கிராசிங் கேட் எண் 146ஐ கடந்த போது அங்கு கேட்மேன் ரயிலின் பின்புற பகுதியில் 7 வது பெட்டியில் உராய்வதை பார்த்து உணர்ந்துள்ளார். பின்னர் உடனடியாக துறைக்கு அறிவிக்கப்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

Next Post

’நிலவில் விரைவில் விவசாயம் செய்யலாம்’ – மயில்சாமி அண்ணாதுரை தகவல்

Sat Oct 8 , 2022
நிலவில் நீர் உள்ளதா இல்லையா என ஆராய்ச்சியில் ஈடுபட்டு நீர் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயம் எனவும் விரைவில் நிலவில் விவசாயம் செய்யலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருச்சி ஆண்டார் வீதியில் தனியார் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுறை விழாவில் பேசினார். அப்போது சந்திராயன் திட்டத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுறை கூறுகையில் ’’ போட்டிகள் […]

You May Like