இந்திய கணினி அவசரநிலை பதில் அளிக்கும் குழு விழாக்காலங்களை பயன்படுத்தி வரும் குறுந்தகவல்கள் பற்றிய அதிர்ச்சி எச்சரிக்கை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து இணைய தள இகாமர்ஸ் நிறுவனங்களும் அதிக அளவில் சலுகைகளை அறிவிக்கின்றன. இதனிடையே அதே போல சலுகைகளையோ அல்லது இந்த லிங்கை க்ளிக் செய்து பரிசுகளை அள்ளுங்கள் என்பது போன்ற குறுந்தகவல்களை நீங்கள் க்ளிக் செய்வதற்கு முன்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
விழாக்காலங்களில் ஏகப்பட்ட குறுந்தகவல்கள் உங்களை கவரும் வகையில் தனியார் நிறுவனங்கள் உங்களுக்கு அனுப்புவார்கள். இது போன்ற வாய்ப்பை பயன்படுத்தி சில மால்வேர்களும் வரும் . இதை நாம் க்ளிக் செய்தால் அவ்வளவுதான் நமது ரகசியங்களை திருடுவதோடு பணத்தையும் அக்கவுண்டையும் கூட ஹேக் செய்ய வாய்ப்புள்ளது என்று இந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழாக்காலங்களில் போலி வதந்திகள் மூலம் இது போன்ற குற்றச் செயல்கள் நடபெறுகின்றன. சிலர் வங்கி விவரங்கள் , பாஸ்வேர்டு மற்றும் ஓ.டி.பிக்களை கேட்டு திருட்டு அதிகம் நடக்கும். இது விழாக்கால சீசன் மட்டுமல்ல ஆன்லைனில் களவாடப்படும் சீசன்கூட என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.
’’ பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி செய்திகளை நீங்கள் பெற நேரிடும். இது போன்ற போலியான வதந்திகளை நீங்கள் நம்பவேண்டாம் என இக்குழு கேட்டுக்கொள்கின்றது. பயனர்கள் பரிசு இணைப்புகள் மற்றும் கிப்டு போன்றவை வழங்குவதாக அறிவித்து மக்களை தன் வசம் ஈர்க்கின்றன.’’ என சி.இ.ஆர்.டி. என்ற குழு தெரிவித்துள்ளது.
பிரபலமான விளம்பர பிராண்டின் பெயர்களை பயன்படுத்தியே பெரும்பாலான கொள்ளை நடைபெறுகின்றது. எனவே வாடிக்கையாளர்கள் முக்கியமாக சீன டொமைன்களில் இருந்து வரக்கூடிய அறிவிப்புகளை கண்டுகொள்ள வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.