ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது இளைய மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து உறவினர்களுக்கு வழங்க வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். அதன்படி, அவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை போன்று அச்சடித்து அதன் முன்புறத்தில், மணமகள்- மணமகன் உள்ளிட்டோரின் பெயர்களை அச்சடித்துள்ளார். அந்த ரூபாய் நோட்டின் பின்புறத்தில் திருமணத்தின் விவரங்கள் இருந்தன.
இதையடுத்து, வெங்கடேஷ் திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கிய போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்கியது போன்ற உணர்வு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே, வெங்கடேஷ் தனது மூத்த மகள் திருமணத்திற்காக திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்கிய வெங்கடேஷை அனைவரும் பாராட்டினர்.