fbpx

இது என்ன புது ரகமா இருக்கு..!! ஒரே ஒரு எழுத்தால் ஓயாமல் வரும் அபராதம்..!! ட்விட்டரில் குமுறிய வாகன ஓட்டி..!!

ரக ரகமான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து அறிந்திருப்போம். அவ்வாறு விதிகளை மீறுவோர்களை போக்குவரத்து போலீசாரால் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அபராதம் விதிப்பதும் நூதன தண்டனை கொடுப்பதுமாக இருந்து வருகிறது. இருப்பினும் அப்படியான செயல்களின் போது சில குளறுபடிகள் நடக்கும். அப்படியான ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான் தற்போது மும்பையில் நிகழ்ந்துள்ளது.

இது என்ன புது ரகமா இருக்கு..!! ஒரே ஒரு எழுத்தால் ஓயாமல் வரும் அபராதம்..!! ட்விட்டரில் குமுறிய வாகன ஓட்டி..!!

அதன்படி, டூ வீலர் வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய வண்டியின் நம்பர் ப்ளேட்டில் உள்ள EJ என்ற எழுத்து FJ ஆக தெரிந்ததால், டூ வீலர் உரிமையாளருக்கு பதிலாக கார் உரிமையாளருக்கு மாதந்தோறும் தவறாமல் மும்பை போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராதத்திற்கான செலான் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், நொந்துப்போன அந்த கார் உரிமையாளரான சுசித் ஷா, ட்விட்டரில் வேதனை பொங்க பதிவிட்டுள்ளார். அதில், விதியை மீறி சிதைந்த நம்பர் ப்ளேட்டை மாட்டியிருந்த அந்த டூ வீலரின் போட்டோவை பகிர்ந்து, “இந்த நபர்தான் தொடர்ந்து டிராஃபிக் விதியை மீறி வருகிறார். அவருடைய டூ வீலர் நம்பர் ப்ளேட்டில் உள்ள MH02EJ0759 என்பதற்கு பதில் MH02FJ0759 என மாற்றியிருக்கிறார். FJ0759 வரிசையில் உள்ளவை என்னுடைய கார் நம்பர்.

இது என்ன புது ரகமா இருக்கு..!! ஒரே ஒரு எழுத்தால் ஓயாமல் வரும் அபராதம்..!! ட்விட்டரில் குமுறிய வாகன ஓட்டி..!!

இதனால் டிராஃபிக் விதியை மீறியதாகக் குறிப்பிட்டு அந்த நபருக்கு பதில் எனக்குதான் மாதாமாதம் தவறாது மும்பை போக்குவரத்து போலீசிடமிருந்து அபராத செலான் வந்துக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக புகார் எழுப்பி நான் நொந்துப்போய்விட்டேன். தயவு செய்து உதவுங்கள்” என மும்பை டிராஃபிக் போலீசையும் டேக் செய்திருக்கிறார். சுசித்ஷாவின் இந்த ட்வீட் வைரலாகவே மும்பை டிராஃபிக் போலீஸ் சார்பாக, “உங்கள் குறைகளை மும்பை டிராஃபிக் ஆப்பில் பதிவிடுங்கள்” என பதிவிடப்பட்டிருக்கிறது. அதற்கு சுசித்ஷா, “ஏற்கெனவே 3 முறைக்கு மேல் புகார் கொடுத்தாகிவிட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எப்படி டிராஃபிக் விதியை மீறியவரை கண்டுபிடித்தீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப, அதற்கு சுசித்ஷா “ஒவ்வொருமுறை செலான் வரும் போதும் ஃபோட்டோவும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்து Mparivaahan-ல் செக் செய்தேன். அப்போதுதான் அந்த டூ வீலரை கண்டுபிடித்தேன். அதனை வைத்து MH 02 EJ வரிசையில் உள்ள வாகனங்களை தேடியபோதுதான் இந்த விதி மீறியவரை கண்டுபிடித்தேன்.” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

இந்த வங்கியில் தப்பி தவறிக்கூட வீட்டுக் கடன் வாங்கிடாதீங்க!!! வங்கிகளில் அதிகரித்த வட்டி விகிதம்...

Sun Oct 9 , 2022
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரித்தது. எஸ்பிஐ வங்கி முதல் பிஎன்பி வங்கி வரை பல வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை கடந்த அக்டோபர் 1முதல் அதிகரித்து இருக்கிறது. அதன்படி எஸ்பிஐ வங்கியானது […]

You May Like