ரயிலில் சீட் பிடிப்பதற்காக இளம்பெண் ஒருவர் ‘சந்திரமுகி’ ஆக மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான அந்த வீடியோவில், டெல்லி மெட்ரோ ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இளம்பெண் ஒருவர், ரயிலில் சீட் பிடிப்பதற்காக ‘சந்திரமுகி’ படத்தில் வருவது போல் மஞ்சள் வண்ணத்தில் சேலை அணிந்து, பார்க்கவே பயங்கர தோற்றத்துடன் ரயிலில் ஏறினார். பின்னர், அங்கிருந்த பயணிகளை பயமுறுத்தியபடியே நடந்துச் சென்றார். அப்போது, குனிந்தபடி, காதில் ஹெட்போன் போட்டு, பாட்டு கேட்டு கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென சந்திரமுகியாக மாறியிருந்த பெண்ணை பார்த்ததும் அலறியடித்து ஓடினார்.
அதன் பிறகு, அந்த இடத்தில் அமர்ந்த ‘சந்திரமுகி’யின் கோபம் தணியவே இல்லை. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.