மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை பெற்றோர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் தாலுகாவில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் வழக்கம்போல் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி இருக்கிறார். அப்போது, முதல் இரவு என்றால் என்ன? என்று மாணவ, மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தாம்பத்தியம் குறித்தும் விளக்கிப் பேசியுள்ளார். பின்னர், அது தொடர்பான ஆபாசப் படங்களையும் மாணவ, மாணவிகளுக்கு போட்டுக் காட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் பிரகாஷை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனையடுத்து, வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாணவ, மாணவியரிடம் அதிகாரி விசாரணை நடத்தி வகுப்பறையில் ஆசிரியர் பிரகாஷின் செயல் குறித்து தெரியவந்ததை அடுத்து அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.